• 9566262275
  • |
  • kjeya228@gmail.com

About Us

பேரன்புடையீர்!,

வணக்கம்!. எம்மிடம் கிடைக்கக்கூடிய உணவு சார்ந்த விளைபொருட்கள் அனைத்தும் இயற்கைவழி வேளாண் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. உணவு தயாரிப்புகள் அனைத்தும் இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்டவை (Home-made - No Artificial & chemical Preservatives,Flavors and Food Colors). உயர்தரமானவை(Supergrade), கலப்படம் இல்லாதவை (No Adulteration), நம்பகத்தன்மை வாய்ந்தவை, எமது பாரம்பரிய உணவு பொருட்களின் தரத்தை மற்றும் விலையை பொறுத்தவரை, உயர்தரமாகவும்,விலை மலிவாகவும்,நியாயமானதாகவும் இருப்பதால்  எந்த சமரசத்திற்கும் இடமே இல்லை(No compromise at all)

பாரம்பரிய இயற்கைவழி வேளாண் விளைபொருட்கள் & உணவு
தயாரிப்புகளின் விலையானது அன்றன்றைய சந்தை நிலவரப்படி மாறுதலுக்குட்பட்டது,

பாரம்பரிய இயற்கைவழி வேளாண் விளைபொருட்கள் & உணவு 
தயாரிப்புகளின் விற்பனைக்காக அரசு வழங்கும் FSSAI சான்றிதழும் (FSSAI CERTIFICATE)எம்மிடம் உண்டு. (Reg.No.: 22423585000219)

நிற்க! விவசாயமே நமது  நாட்டின் முதுகெலும்பு. நீங்கள் மேற்கண்ட இயற்கைவழி வேளாண் (இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட) உணவு பொருட்களை பயன்படுத்த துவங்கியதுமே உங்கள் உடல்நலம் வியக்கத்தக்க வகையில் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் மறைமுகமாக இயற்கை விவசாயிகளுக்கும் ஆதரவு கரம் நீட்டுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

“உணவே மருந்து - மருந்தே உணவு” என்ற தாரக மந்திரத்தை மேம்போக்காக எடுத்து கொள்ளாமல் எப்போதும் அதை நினைவில் இருத்திக்கொண்டு, மேற்கண்ட  இயற்கையான பாரம்பரிய உணவு  பொருள்களை வாங்கி, வியத்தகு பலன்களை பெற்று, உங்கள் நலவாழ்வை மேம்படுத்துவீர்! வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு!


     மேற்கண்ட  இயற்கையான பாரம்பரிய உணவு  பொருள்களை வாங்கி, நீங்கள் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 1 முதல் 2 மண்டலங்கள் வரை (1 மண்டலம் என்பது 42 (அ) 48 நாட்களை குறிக்கும்) உட்கொண்டு வந்தால் மட்டுமே, உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாக, ஆச்சரியப்படத்தக்க வகையில் சிறப்பான பலன்களை கண்கூடாக அனுபவித்து உணர  முடியும். இயற்கை உணவுகளை பொறுத்தவரை, வாரத்திற்கு 1 – 2 வேளைகள் (அ) 1 - 2 நாட்கள் (அ) ஒரு மாதத்தில் எப்போதாவது மட்டும் உட்கொள்வதால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை அடைய முடியாது, இவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும்போதுதான்  உங்களை ஆட்கொண்டிருக்கும் அநேக நோய்களிலிருந்து நிரந்தர விடுதலை பெறுவீர்கள் என்பது மட்டும் திண்ணம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”. எனவே பாரம்பரிய இயற்கை உணவுகள் பக்கம் உங்கள் பார்வையை திருப்புவீர்! மற்றும் கடைபிடிப்பீர்!  இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்!
     நன்றி! வணக்கம்
 

முக்கிய குறிப்பு:

விலை குறிப்படப்படாத பொருட்கள் அனைத்தும் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது (அ) இருப்பில் இல்லை என்பதாக புரிந்து கொள்ளவும்.

நோய்நொடியின்றி நலமுடன் நீண்ட நாள் வாழ நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான உணவு சார்ந்த விஷயங்கள்:


(1)அநேக நோய்களுக்கு முக்கிய காரணமான,செயற்கையான இரசாயனங்கள் செறிந்த வெள்ளை சர்க்கரை, மைதா மற்றும் இவற்றால் செய்யப்பட்ட அனைத்து உணவுகளையும் (பரோட்டா,நாண் ரொட்டி,மைதாவினால் தயாரிக்கப்பட்ட சேமியா, நூடுல்ஸ், பர்கர், பீஸா, பாஸ்தா, மக்ரோணி, அனைத்துவித பேக்கரி  & லாலாகடை இனிப்பு தின்பண்டங்கள், டீ கடை  கஜடா (முட்டைகோஸ்) போன்றவை) கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


(2)நீங்கள் வழக்கமாக பயன்படுத்துகிற, நன்கு பட்டை தீட்டப்பட்ட கவர்ச்சிகரமான, எந்தவித சத்துக்களும் அறவே இல்லாத, வெறும் சக்கை உணவான வெள்ளை அரிசியை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, தீட்டாத (அ) லேசாக தீட்டிய(Semi-polished) பாரம்பரிய சிகப்புரக, வெள்ளை ரக அரிசி வகைகள், லேசாக தீட்டிய சிறுதானியங்கள் மற்றும் இயற்கைவழி வேளாண் பயறு,பருப்பு வகைகளை உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால் உங்கள் உடல்நலம் சிறப்பாக மேம்படும்.


(3)இனிப்பு  சுவைக்கு, கலப்படமற்ற தூய பனங்கற்கண்டு, கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, பனஞ்சர்க்கரை(Palm Sugar)தென்னஞ்சர்க்கரை(Coconut Sugar) மற்றும் தூய தேன் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்துவது நல்லது.


(4)சந்தைகளில் மிகுதியாக கிடைக்கக்கூடிய அதிபதப்படுத்தப்பட்ட உணவுகள்(Ultra processed Food), செயற்கையான கரியமலவாயு  ஏற்றப்பட்ட  குளிர் பானங்கள்(Artificial Carbonated Soft Drinks) ஆகியவற்றை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.


(5)உயிர்ச்சத்துக்கள் அறவே இல்லாத, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் வகைகளை (Refined or Double Refined Cooking Oil Varieties) கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
உலகிலேயே முதலிட சமையல் எண்ணெயாக கருதப்படும்  மரச்செக்கு அரிசி தவிட்டு எண்ணெய் (Cold-pressed Rice Bran Oil) மற்றும் இதர சமையல் எண்ணெய் வகைகளான  மரச்செக்கு எள்ளெண்ணெய்(நல்லெண்ணெய்), கடலை (நிலக்கடலை) எண்ணெய், அசல் சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றை உபயோகிப்பது மிகவும் நல்லது.இந்த விடயத்தில் அதிக கவனம் தேவை,


(6)வழக்கமான புளிக்கு மாற்றாக, அதிக நன்மைகள் கொண்ட குடம்புளியை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.


(7)கலப்பட உணவு பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை தவிர்த்து விட்டு, அசல் உணவு பொருட்களை தேர்வு செய்துகொள்ள பழகி, அவற்றை மட்டுமே பயன்படுத்துங்கள். (உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அலைபேசியில் எம்மை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்.) 

(8)கல்லுப்பை(கடல் உப்பை)உணவில் அளவோடு சேர்க்கவும். இதற்கு மாற்றாக,பாரம்பரிய முறையில் சுத்திகரிக்கப்பட்ட இந்துப்பு (பாறை உப்பு) பயன்படுத்துவது மிகவும் நல்லது.
எந்த உப்பாக இருந்தாலும் அளவோடு பயன்படுத்தவும்.


(9)நீங்கள் வழக்கமாக பருகும் டீ & காபியின் அளவை முறைபடுத்துங்கள் (தினசரி 2 (அ) 3 குவளை என்றால் பரவாயில்லை). சிக்கரி கலவாத காபியே உடலுக்கு நல்லது. முடிந்த வரையில் மூலிகை தேநீர் (அ) காபியை பருக துவங்கினால் உடல்நலம் சிறப்பாக மேம்படும்.


(10)நீங்கள் நோய்நொடியின்றி நீண்ட நாள் வாழ விரும்பினால், தினமும் சமச்சீர் உணவை (Balanced Diet)அளவோடு உண்பதும்,தினமும் 8 மணி நேரம் உறங்குவதும், தினமும் 2.5 - 3 லி. நீர் பருகுவதும், தினமும் அரை மணி நேரமாவது யோகாசனம் & மூச்சுப்பயிற்சி (அ) உடற்பயிற்சி (அ) நடை பயிற்சி மேற்கொள்வதும் மிகமிக அவசியம். நீங்கள் மன அழுத்தம், மன உளைச்சல் நீங்கி மன அமைதியோடு இருக்க வேண்டுமானால் தினமும் அரை மணி நேரமாவது ஆன்மீக காரியங்களில் ஈடுபடுங்கள். வாரம் ஒரு முறையாவது உண்ணாநோன்பை(Fasting) (காலையில் மட்டும்) கடைபிடிக்கவும். இந்த மாதிரியான விஷயங்களில் தயவுசெய்து அசட்டை செய்யாதீர்கள்.
     நன்றி! வணக்கம்!         







 

Veeramamunivar Tradtional Food Products | All Requirements CALL +91 9566262275

-->
Back to Top
Loading....